Sunday, July 12, 2020

ஆவணி மாதம்

ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் பேசுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர்.

சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம், வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில்தான். காஞ்சி காமாட்சி ஆவணி மூல தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் புனிதமானது; மோட்ச கதியை தரவல்லது. இளையான்குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்கள் அவதரித்த மாதம் இந்த ஆவணி.

வணி ஞாயிறு


ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே" சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர்.

https://www.google.co.in/maps/place/Sooriyanarkoil,+Tamil+Nadu+612102/@11.0343432,79.4614749,14z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3a552e852afc8b61:0x352fbbeb5344e8ec!8m2!3d11.0370288!4d79.4732009?hl=en-GB

மீனாட்சி ஆட்சி


மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, புட்டுக்காக மண் சுமந்தது, நரிகளைப் பரிகளாக்கியது, வளையல் விற்ற லீலை... என, மதுரை மண்ணில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இந்த விழாவில் இடம்பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சொக்கநாதருக்குப் பட்டாபிஷேகம் செய்யப்படும்.

வடமொழியில் சிரவண நட்சத்திரம் என்றழைக்கப்படும் திருவோணத்தில் பௌர்ணமி வருவதால் சிரவண மாதம், ஆவணி மாதம் ஆகியது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருவோண நாளை விரத நாளாக அனுசரிக்கின்றனர்.

நாடெங்கிலும் ஆவணி மூலத் திருவிழா கொண்டாடப்பட்டாலும் மதுரை பிட்டுத் திருவிழா குறிப்பிடத்தக்க ஒன்று. ஏழைக் கிழவியான வந்தி என்பவளுக்காக ஈசன் மனிதர்களோடு மனிதராய்க் கலந்து பிட்டுக்காக மண் சுமந்து, கூலி வாங்கி, பிரம்படியும் பெற்றுக் கொண்ட பெருநாள், ஆவணி மூல நாள்.

ஆவணி அவிட்டம்


ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடாகும். இது ரிக்,யசுர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும். இந்நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கிய இருடிகளுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர். தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர். சமசுகிருதத்தில் இது உபாகர்மா என வழங்கப்படுகிறது. இதன் பொருள் தொடக்கம் எனபதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கொள்ளலாம். 

இறைவன்  நாம் இந்த பூமி சகல ஐஸ்வர்யங்களையும் பார்ப்பதற்கு நன்மை தீமைகளைப் பகுத்து அறிவதற்கு நமக்கு அளித்த கண்கள் இரண்டு. ஆனால், நாம் நம் புத்தக அறிவைத் தாண்டி இறைவனை அறியவும் இறை சிந்தனையுடன் திகழவும் நமக்கு ஞானக்கண் என்னும் இன்னுமொரு கண் தேவை. அந்தக் கண் கொண்டு பார்க்கத்தொடங்கும் வைபவமே உபநயனம்எனப்படுகிறது. உபநயனம் என்றால் நமக்கு துணையாக வரும் இன்னுமொரு கண் என்று பொருள்.

உபநயனம் செய்வது என்பது ஒரு தொடக்க நிகழ்ச்சிதானே தவிர, அந்த நாள் முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் ஆகியவற்றை நாம் முறையாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம். ஒரு குருவின் துணையுடன் இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்வதுதான் இதன் நோக்கம். வீட்டுப் பெரியோர், தகப்பனார், ஆச்சார்யர் ஆகியோர் மூலமாகத்தான் உபநயனம் செய்விக்கப்படவேண்டும்.

இப்படி உபநயனம் செய்விக்கப்பட்டபின் தாங்கள் அணிந்த பூணூலை, ஆண்டுதோறும்  ஆவணி அவிட்ட நாளில் மாற்றி புதிய பூணூல் அணிவார்கள். அதுவே ஆவணி அவிட்ட நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி


கிருஷ்ண ஜெயந்தி (சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது.

ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும். மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும், வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும் போது, தண்ணீர் பீய்ச்சி அடித்து, அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.

தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமணர்கள், இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர். தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.

கிருஷ்ணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால், பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு, குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன. 

No comments:

Post a Comment